வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (21:57 IST)

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லவிருக்கும் மீராமிதுனின் பரம எதிரி!

மீராமிதுன் கடந்த 2016ஆம் ஆண்டின் மிஸ் சென்னை பட்டம் வென்றவர் என்பதும் அதன்பின்னர் அந்த பட்டத்தை அவர் தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டதால் அந்த பட்டத்தை இழந்தவர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மீரா மிதுன் மிஸ் சென்னை பட்டத்தை இழந்ததை அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்த சனம்ஷெட்டி மிஸ் சென்னை பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
 
இதனால் மீராமிதுன், சனம்ஷெட்டியை தனது பரம எதிரி பட்டியலில் வைத்துள்ளார். இந்த நிலையில் அபிராமியை கடுப்பேத்தவே மீராமிதுனை உள்ளே கொண்டு வந்த பிக்பாஸ், தற்போது மீராமிதுனை வெறுப்பேற்ற சனம் ஷெட்டியை பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
மேலும் சனம்ஷெட்டியின் பாய்ஃபிரெண்ட் தான் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் தர்ஷன் என்பது கூடுதல் தகவல். ஒருவேளை சனம்ஷெட்டி பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்தால் தர்ஷனும், சனம்ஷெட்டியும் ஒன்றாக சேர்ந்து, மீராமிதுனை வச்சு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.