செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (15:47 IST)

பாத்ரூமில் பேசிக்கொண்டிருந்த ஷெரின் , தர்ஷனை பிரித்து மேய்ந்த வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோவில் சேரனிடம் வனிதா, உங்கள் அணியில் இருந்து ஒரு ஆள் வேல பண்ணனும் என்று மறைமுகமாக ஷெரீனை குறிப்பிடுகிறார். அப்போது ஷெரின் தர்ஷனிடம் பாத்ரூமில் பேசிக்கொண்டிருக்கிறார். 


 
இப்படி தன்னை மறைமுகமாக குறைசொல்லும் வனிதாவின் வார்த்தைகளை கேட்டவுடனே அங்கிருந்து எழுந்து வரும் ஷெரின்" சொல்லுங்க இப்போ என்ன பண்ணணும் சொல்லுங்க என கேட்கிறார். அதற்கு வனிதா" நீ எந்த டீம்மில் இருக்கியோ அந்த டீமிற்கு வேலை பார்க்க கற்றுக்கொள் என்று அட்வைஸ் கொடுக்கிறார். இதனால் கடுப்பான ஷெரின் "இது ஒன்னும் ஜெயில் இல்ல அவங்க ஒன்னும் வார்டன் கிடையாது .. 24 மணிநேரமும் அவர்கள் சொல்வதெல்லாம் பண்ணிட்டே இருக்கணும்னு என்று கூறுகிறார்.
 
இதனால் மீண்டும் இன்றைய நிகழ்ச்சியில் வனிதா ஷெரின் சண்டை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் சாக்ஷி , லொஸ்லியாவின் சண்டை வேறு இருப்பதால் நிச்சயம் இன்றைய நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.