புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (22:58 IST)

லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது! காரசாரமான விவாதம்

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி விருது அளிக்கப்பட்டது.  அதனை சாக்ஸியிடம் இருந்து வாங்கிய லாஸ்லியா தூக்கி எறிந்ததை புரமோவில் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இது குறித்து காரசாரமான விவாதங்கள் நடந்தது தெரிய வந்துள்ளது 
 
இந்த விருதை வாங்காமல் தூக்கி போட்டதை குறை கூறிய மோகன் வைத்யா, நீ இந்த விருதை வாங்கி விட்டு வெளியில் சென்று தூக்கி போட்டு இருக்கலாம் என்று கூறினார். இதன் பின்னர் லாஸ்லியாவுக்கு ஆதரவாக பேசிய சேரன் ’இந்த விருது எதற்காக வழங்கப்படுகிறது என்ற காரணத்தை நீங்கள் சொல்லாமல் கொடுத்து இருக்கின்றீர்கள்,  நீங்கள் அதன் காரணத்தை சொல்லி இருந்தால் அந்த விருதை வாங்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்திருப்பார். எனவே தவறு உங்கள் மீது தான் என்று கூறினார். அதற்கு மோகன்  பதிலுக்கு வாக்குவாதம் செய்தார் 
 
அதன்பின் லாஸ்லியாவுக்கு இந்த விருது ஏன்? என்ற காரந்த்தை சொல்லத் தொடங்கினார் சாக்சி. சேரன் - லாஸ்லியா அப்பா மகள் உறவு போலியானது என்று, இந்த வீட்டில் லாஸ்லியா பிறரைப் பற்றி பின்னால் பேசியதாகவும், அதனால் பச்சோந்தி விடுதி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார் 
 
 
இந்த நிகழ்ச்சியை பொருத்தவரையில் பின்னால் நின்று பேசாத போட்டியாளர்களே இல்லை. அவ்வாறு இருக்கும்போது லாஸ்லியாவை மட்டும் குறிவைத்து விருது வழங்குவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது. மேலும் விருது கொடுக்க வந்த மோகன் வைத்யா இவ்வளவு டென்ஷன் ஆக வேண்டிய அவசியமே இல்லை. எதற்காக அவர் லாஸ்லியா மீது தனிப்பட்ட முறையில் வன்மம் தடவி உள்ளார் என்பதும் தெரியவில்லை. 
 
எனது வயதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறும் மோகன் வைத்யா, முதலில் அவர் வயதுக்கு தக்கவாறு நடந்து கொண்டாரா? என்ற கேள்வியே பார்வையாளர்களுக்கு எழுகிறது. மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் காரசாரமான விவாதம் அவர் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை