புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 8 செப்டம்பர் 2019 (09:20 IST)

வனிதா, சாண்டியை பங்கமாய் கலாய்த்த கமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை வனிதாவின் முகத்தையும், சனி, ஞாயிறு கமல் முகத்தையும் மட்டுமே பார்க்க வேண்டிய நிலை உள்ளது. மற்றவர்கள் எல்லாம் களத்தில் இருக்கின்றார்களா? என்றே தெரியவில்லை. எப்போது வனிதா பேசுவதையே பார்த்து கொண்டிருக்கின்றனர். ஒருசிலர் எதிர்த்து பேசினாலும் அவர்களை வனிதா பேச விடுவதில்லை என்பது வேறு விஷயம்
 
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் ‘அகம் டிவி வழியே அகத்திற்குள்’ என்று சொல்லாமல் திடீரென கமல் டிவி முன் தோன்றினார். கமல் வர இன்னும் நேரம் ஆகும் என ஹாயாக படுத்திருந்த சாண்டியை பங்கமாய் கமல் கலாய்க்க, அதற்கு ‘நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன்’ என்று கூறி சாண்டி சமாளிக்கின்றார்.
 
இதேபோல் கமல் ஒருசில கருத்துக்களை கூற முற்போடும்போது வழக்கம்போல் வனிதா குறுக்கே பேச முயற்சிக்க, அதற்கு கமல், ‘கொஞ்சம் இருங்க நான் சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிடுறேன், இல்லைனே மறந்துவிடுவேன்’ என்று கூறிவிட்டு சில நொடிகள் மெளனம் காத்து பின் ‘மறந்துவிட்டேன்’ என்று கூறுவது வனிதாவை பங்கமாய் கலாயத்துள்ளார் என்பது புரிகிறது
 
எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கமல்ஹாசனால் ஜாலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது