புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (09:12 IST)

2.0 ரிலீஸ் தினத்தில் சிம்பு ரசிகர்களுக்கு கிடைக்கும் விருந்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதே நாளில் சிம்புவின் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டீசரை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. எனவே 2.0 திரையிடும் திரையரங்குகளில் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டீசர் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புரமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் சிம்புவின் ஒருசில காட்சிகள் இருப்பதோடு நவம்பர் 29ஆம் தேதி டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சிம்புவின் ரசிகர்களுக்கு கிடைத்த ஸ்பெஷல் விருந்தாக கருதப்படுகிறது.

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இந்த படத்தில் பாடல்கள் மிகவிரைவில் வெளியாகவுள்ளது.