புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (15:30 IST)

சிம்புவுக்கு நன்றி கூறிய சூர்யா !

ஜோதிகாவுடன் நடித்து படத்தை மேலும் சிறப்பித்த நடிகர் சிம்புவிற்கு சூர்யா நன்றி கூறியுள்ளார் .
 
 
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் இன்று  வெளியான காற்றின் மொழி படம் சிறந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. 
 
ஹிந்தியில் வித்யா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை ஜோதிகா இன்னும் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 
 
ஆர்.ஜெ வாக ஜோதிகா நடித்திருக்கும் இந்த படத்தில் வித்தார்த், லக்ஷ்மி மஞ்சு, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி போன்ற நட்சத்திரங்கள் கலக்கியிருக்கின்றனர்.
 
இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் சிம்பு வரும் காட்சிகள் திரையரங்கை அதிரவைத்தது. இதற்கு நன்றி கூறும் வகையில், நடிகர் சூர்யா படத்தை பார்த்துவிட்டு அனைவரையும் பாராட்டியுள்ளார். 
 
நடிகர் சிம்புவுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பதிவிட்டசூர்யா , நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்கள் இப்படத்தை வெற்றியடையச்செய்வர் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.