1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (18:47 IST)

வணங்கான் படத்துக்கு இதுவரை சூர்யா செய்த செலவு இத்தனை கோடியா?

சூர்யா நடித்து, தயாரித்து இயக்குனர் பாலா இயக்கத்தில் 40 நாட்கள் வரை ஷூட்டிங் நடந்த வணங்கான் திரைப்படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பில் இயக்குனர் பாலா தரப்பில் இருந்து ஒரு கடிதம் வெளியானது. அதில் “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ’வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் நிகழ்ந்த மாற்றங்களினால் இந்த கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமோ என்ற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. 

எனவே ’வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம் தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. ‘நந்தா’வில் நான் தான் பார்த்த சூர்யா, பிதாமகன் - இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி ’வணங்கான்’ பணிகள் தொடரும் ” எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இப்போது வரை இந்த படத்துக்கா சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 10 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.