1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (17:07 IST)

’வலிமை 'படத்தின் முக்கிய அப்டேட்... ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித்  நடித்துள்ள  ‘வலிமை’ படத்தின்  முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர்  தற்போது, இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை  போனி கபூர் தயாரித்தது வருகிறார்.

இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஈற்படுத்தியுள்ள வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில்  தீம் மியூசிக் வெளியாகி வைரலானது.

 இதனை அடுத்து டீசர் மற்றும் டிரைலர் உள்பட அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம்  இந்தி மற்றும் தெலுங்கிலும் ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.