திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:16 IST)

அண்ணாத்த படத்தின் எஸ்பிபியின் கடைசி பாடல் ரிலீஸ் எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெற்ற ரஜினியின் அறிமுக பாடலை மறைந்த பாடகர் எஸ்பிபி பாடிய இருந்தார் என்ற தகவல் ஏற்கனவே தெரிந்ததே 
 
டி இமான் இசையமைப்பில் உருவாகிய இந்த பாடல்தான் எஸ்பிபி பாடிய கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் எஸ்பிபி பாடிய இந்த பாடல் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி தான் எஸ்பிபி காலமானார் என்பதால் அவரது ஒரு ஆண்டு நினைவு தினத்தை அடுத்து அவரது கடைசி பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது 
 
மேலும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொடர்ச்சியாக இனி புரமோஷன் பணிகளையும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது