ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

வலிமை ரிலீஸ் டிசம்பருக்கு சென்றதற்கு சிறுத்தை சிவா காரணமா?

தல அஜித் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படம் வரும் தீபாவளி அன்று ரஜினியின் அண்ணாத்த படத்துடன் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 
 
ஆனால் தற்போது வந்த தகவலின் படி வலிமை திரைப்படம் டிசம்பருக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அஜித் தான் என்றும் அண்ணாத்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தனக்கு நெருங்கிய நண்பர் என்பதால் அவருடைய படத்துடன் மோத வேண்டாம் என அஜித் கண்டிப்பாக கூறி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
எனவே அண்ணாத்த படத்துடன் வலிமை படம் போதவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி உடன் கூடிய போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன