செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (18:29 IST)

இன்று நள்ளிரவு வெளியாகிறதா ‘வலிமை’ டீசர்?

தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர், டிரைலர் ஆகிய புரமோஷன் வீடியோக்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சற்று முன்னர் டுவிட்டர் இணையதளத்தில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக ஹேஷ்டேக் ஒன்று டுவிட்டரில் டிரண்ட் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
படக்குழுவினர் இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடாத நிலையில் அஜித் ரசிகர்கள் இதனை டிரெண்ட் ஆக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இன்று இரவு ‘வலிமை’ திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.