1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:38 IST)

இன்று வெளியாகிறது வலிமை முதல் சிங்கிள்? எத்தனை மணிக்கு? – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சமீபத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் இன்று முதல் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ள நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு பல மாதங்களாக ரசிகர்கள் போராடிய நிலையில் சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது.

அதை தொடர்ந்து தற்போது வலிமை படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று சர்பரைஸாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று இரவு 9 மணிக்கு மேல் இந்த முதல் பாடல் வெளியாகலாம் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் கசிந்துள்ளது.