ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (00:01 IST)

எலான் மஸ்க்: சந்திக்க மறுத்த டிம் குக் –

டெஸ்லாவை ஆப்பிள் நிறுவனத்திற்கு விற்க விரும்பிய எலான் மஸ்க்: சந்திக்க மறுத்த டிம் குக் – வெளிவந்த சுவாரஸ்யம்
 
டெஸ்லா நிறுவனத்திற்கு பத்திரிகை அலுவலகம் இல்லை.
 
அதன் நிர்வாக தலைவர் எலான் மஸ்க் அதற்கான தேவையும் இல்லை என்கிறார்.
 
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பை போல ஏதேனும் தகவலை பரிமாற அவர் டிவிட்டரை பயன்படுத்துகிறார்.
 
அதேபோன்றுதான் வெள்ளிக்கிழமையன்று ட்வீட் செய்வதில் அதீத மும்முரம் காட்டினார் எலான் மஸ்க்
 
விளம்பரம்
 

எலான் மஸ்க் குறித்து புதிய புத்தகம் ஒன்று வருகிறது. அதில் 2016ஆம் ஆண்டில் எலான் மஸ்க் நெருக்கடியை சந்தித்தபோது ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், டெஸ்லா நிறுவனத்தை வாங்குவார் என்ற நம்பிக்கையில் அவரை தொடர்பு கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் எலான் மஸ்க், அதன்பின் டிம் குக் எங்கு செல்ல வேண்டும் என்று கோரியுள்ளார் என்றும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எலான் மஸ்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்ப அவருக்கு பத்திரிகை அலுவலகம் இல்லை. எனவே டிவிட்டரிலேயே அந்த செய்தி உண்மையா என கேள்வி எழுப்பினேன்.
 
எனது கேள்விக்கு அவர் பதில் தந்தார். ஆனால் அதனை தொடர்ந்து பதியப்பட்ட டிவிட்டர் பதிவுக்கு அவர் அளித்த பதிலும் ஒரு முக்கிய செய்திதான்.
 
சரி முதலில் எனது கேள்விக்கு அவர் அளித்த பதிலை பார்ப்போம், குக்கும் நானும் இதுவரை சந்தித்ததோ அல்லது எழுத்துப் பூர்வமாக தொடர்பு கொண்டதோ இல்லை.
 
ஒரு தருணத்தில் டெஸ்லாவை ஆப்பிள் நிறுவனம் வாங்கி கொள்வது குறித்து பேச குக்கை நான் சந்திக்க விரும்பினேன். ஆனால் நான் எந்த நிபந்தனைகளையும் வைக்கவில்லை.
 
குக் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். அப்போது டெஸ்லாவின் மதிப்பு இப்போது இருக்கும் மதிப்பில் 6 சதவீதம்தான்.
 
டிவிட்டர்சரி இது என்னுடைய கேள்விக்கான பதில். அடுத்து எலான் மஸ்க் சொன்ன அந்த செய்தி என்ன தெரியுமா?
 
எலான் மஸ்க் எனது பதிவிற்கு பதிலளித்தபோது, வேறொரு டிவிட்டர் பயனர் ஒருவர் எலான் மஸ்க் ஆப்பிளின் சிறந்த முதன்மை நிர்வாகியாக இருப்பார் என்று தெரிவித்தார்.
 
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் ’நான் எந்த நிறுவனத்திற்கும் சிஇஓ-வாக விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.
 
Twitter பதிவை கடந்து செல்ல, 1
 
Twitter பதிவின் முடிவு, 1
கடந்த மாதம் நீதிமன்றம் ஒன்றில் ஆதாரங்கள் குறித்து பேசும்போதும் எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
 
"டெஸ்லாவின் தலைவராக இருப்பதை நான் வெறுக்கிறேன். அதற்கு பதிலாக டிசைனிங் அல்லது பொறியியல் சார்ந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
 
இருப்பினும் டெஸ்லாவின் சிஇஓ-வாக தான் தொடர்வது குறித்த காரணத்தையும் அவர் தெரிவித்தார். "எனக்கு வேறு வழியில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் தலைவராக இல்லையென்றால் டெஸ்லா அழிந்துவிடும்" என்றார்.
 
இவ்வாறு எலான் மஸ்க் தொடர்ச்சியாக கூறுவது சில முதலீட்டாளர்களை வருத்தமடைய செய்யலாம்.
 
அவரை பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும், எலான் மஸ்கின் ஆளுமைதான் டெஸ்லாவின் வெற்றிக்கு காரணம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
 
உலகளவில் அதிக மதிப்பு கொண்ட ஒரு கார் நிறுவனம் டெஸ்லா.
 
எலான் மஸ்க் டெஸ்லாவின் தலைவர் மட்டும் அல்ல.
 
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் அவர்தான் தலைவர். மக்களை நிலவிற்கு அனுப்ப நாசா இதனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்பேஸ் எக்ஸ்