கால்ஷீட் ஒதுக்கிய உதயநிதி; தொடங்குகிறது ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக்!
இந்தி திரைப்படமான ஆர்ட்டிக்கிள் 15 திரைப்படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “ஆர்ட்டிக்கிள் 15”. இந்த படத்தை தமிழில் உதயநிதி நடிக்க அருண்ராஜகாமராஜ் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.
எனினும் கொரோனா மற்றும் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றால் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் 15 முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக உதயநிதி ஸ்டாலின் 20 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.