திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (10:16 IST)

சன்னி லியோன் படத்தில் ஒப்பந்தமான டிக்டாக் ஜி பி முத்து!

டிக் டாக் மூலமாக பிரபலமான ஜி பி முத்து சன்னி லியோன் நடிக்கும் புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் கவர்ச்சி நடிகையாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன்.  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இப்போது தமிழில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்து ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.