1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (17:44 IST)

வலிமை செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? தல ரசிகர்களுக்கு செம்ம அப்டேட்!

வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் இந்த வாரம் வியாழக்கிழமை அன்று வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் வெளியாக உள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் வேற மாரி என்ற பாடல் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த வாரம் வியாழக்கிழமை படத்தில் இடம்பெற்றிருக்கும் தாய் செண்டிமெண்ட் பாடல் ஒன்று வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பாடலை தாமரை எழுதி இருப்பதாகவும், பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளதாகவும் சொலல்ப்படுகிறது.