இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா பாதிப்பா...?
இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் தகவல்.
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வரும் நிலையில் பல்வேறு வகை வீரியமடைந்த கொரோனா வைரஸ்களால் உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து பரவ தொடங்கியுள்ள வீரியமிக்க கொரோனாவான ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்பதால் உலக நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ளன.
ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேசத்தின் மதுராவிற்கு சுற்றுலா வந்த 4 பயணிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களை சோதித்ததில் அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் உறுதியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதனை கூறியுள்ளார்.