புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (11:24 IST)

தாமிரபரணி ஆற்றங்கரையில் சடலமாக ஒதுங்கிய சிறுத்தை!

அம்பாசமுத்திரம் அருகே உள்ள ஊர்க்காடு எனும் பகுதியில் ஆற்றங்கரையில் பெண் சிறுத்தை ஒன்று சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊர்க்காடு பகுதிக்கு அருகே உள்ள ஆற்றங்கரையில் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். வனத்துறை ஊழியர்கள் வந்து அந்த பெண் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர். பிணக் கூறாய்வு நடத்தி சிங்கம்பட்டி பீட் பகுதியில் எரியூட்டியுள்ளனர். இறந்த சிறுத்தை 5 வயது பெண் சிறுத்தை என்று கண்டறியப்பட்டுள்ளது.