வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (15:54 IST)

வலிமை ரிலிஸ் தேதியும் போனி கபூரின் குடும்ப செண்ட்டிமெண்ட்டும்!

போனி கபூர் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்ததற்கு அவரின் குடும்ப ரீதியான செண்ட்டிமெண்ட் காரணம் ஒன்று உண்டாம்.

கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்த வலிமை படத்தின் ரிலிஸுக்காக ரசிகர்கள் கிடையாய் கிடந்தனர். படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் முதல்வர், பிரதமர் வரை கேட்டு தொல்லைக் கொடுத்து வந்தனர். இந்நிலையில் ஒருவழியாக போனி கபூர் வலிமை பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்து அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

போனி கபூர் இந்த தேதியை உறுதி செய்ததற்கு ஒரு செண்ட்டிமெண்ட்டான காரணமும் இருக்கிறதாம். பிப்ரவரி 24 ஆம் தேதிதான் அவரின் மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி இயற்கை எய்தினார். அதனால் அந்த நாளில் படடத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம்.