செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (10:29 IST)

கொரோனா நெகட்டிவ் வந்தும் இரண்டாவது போட்டியில் ஆடமுடியாத இரண்டு வீரர்கள்!

கொரோனா காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஷிகார் தவான் உள்ளிட்ட வீரர்கள் விளையாட முடியவில்லை.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இதற்கு தேர்வு செய்யப்பட்டு இருந்த இந்திய வீரர்களில் 4 பேர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இப்போது அவர்கள் தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அந்த வீரர்களுக்கு மறுபடியும் சோதனை செய்ததில் ஷிகார் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருக்கும் கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தது. ஆனாலும் அவர்கள் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாட அனுமதிக்கப் படவில்லை. அவர்கள் மருத்துவக் கண்காணிப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் லேசான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.