சனி, 21 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (10:22 IST)

கொரோனா திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையும் - WHO

அடுத்தடுத்த கொரோனா திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும் என WHO தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
ஆம், உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் இது குறித்து தெரிவித்ததாவது, கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது. ஒமைக்ரானை தொடர்ந்து உருவெடுக்கும் அடுத்த திரிபு தீவிரத் தொற்றுத் தன்மை கொண்டதாக இருக்கும். 
 
எனவே இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும்.  கொரோனாவின் அடுத்த திரிபு, வேகமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும். இதனால் அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும் என எச்சரித்துள்ளார்.