வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (09:55 IST)

வடிவேலு படத்தில் இணைந்த பிரபுதேவா… கோடி ரூபாய் சம்பளத்தோடு!

வடிவேலு நடிக்கும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பாடலுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் பாடல்களுக்கு நடனம் அமைக்க பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக  அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் ஆரம்ப கால பாடல்கள் மற்றும் நடனம் வெகு பிரசித்தி பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள பாடல் மற்றும் நடனம் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.