செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (16:04 IST)

‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ - டிரெண்டிங் நம்பர் 1

அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ தற்போது வரை இந்த வீடியோவை 3,940,311 பேர் பார்த்துள்ளனர். 

 
தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியது. அட்டகாசமான பைக் காட்சிகளுக்காக படக்குழுவினர் ரிஸ்க் எடுக்கும் காட்சிகள் ஆகியவை இந்த வீடியோவில் உள்ளன. 
 
மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவை பார்க்கும் போதே ரசிகர்களுக்கு மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளதை அடுத்து மூன்று மணி நேரம் ஓடும் ‘வலிமை’ திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை யோசித்து பார்க்க முடிகிறது.
 
அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து ரிஸ்க் எடுத்து எடுத்து உள்ள காட்சிகள் உலகத்தரமானது என்பதும் இந்த படம் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
தற்போது வரை இந்த வீடியோவை 3,940,311 பேர் பார்த்துள்ளனர். ட்ரெண்டிங்கில் முதல் இடமும் பிடித்துள்ளது. சோனி மியூசிக் சவுத் தங்கள் யூடியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.