1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (16:06 IST)

எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் பனங்கிழங்கு !!

பனங்கிழங்கு என்பது பனைமரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு வகையான கிழங்கு ஆகும்.பனைமரத்தின் பழத்தை சாப்பிட்டுவிட்டு அந்த கொட்டையை தனியாக புதைத்து வைத்து அதில் இருந்து கிடைக்கக்கூடியது தான் இந்த பனங்கிழங்கு.

எண்ணற்ற நன்மைகள் நிறைந்த இந்த பனங்கிழங்கு அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் ஏராளமான பலன்களை நாம் பெறலாம். 
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் மண்ணில் விளையக்கூடிய பொருட்களை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால் பனங்கிழங்கில் உள்ள வேதி பொருட்கள் நம் உடம்பில் இன்சுலினை சுரக்க வைத்து இரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
 
பனங்கிழங்கில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுவதால் இரத்த சோகை உள்ளவர்கள் இதை அடிக்கடி எடுப்பதன் மூலம் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.
 
பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை பிரச்சினைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. மேலும் மலச்சிக்கல் பிரச்சினைக்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது.செரிமானமண்டலத்தை சீராக்கி உணவு செரிமானத்துக்கு உதவுகிறது.
 
பனங்கிழங்கு சாப்பிடுவோர் பரம்பரைக்கே சர்க்கரை நோய் வராது என்பது பெரியோர்களின் கருத்து ஆகும். மேலும் பனங்கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் இது உடல் உஷ்ணத்தை குறைத்து சீராக வைக்க உதவுகிறது.
 
பனங்கிழங்கை பொடி செய்து அதை பாலுடனோ இல்லை கூழ் செய்தோ சாப்பிடுவது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலுக்கு தேவையான வலுவையும் கொடுக்கிறது.