1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (16:04 IST)

நேரலையில் பெண் தொகுப்பாளரின் ஆடையை வெட்டிய ஆண் தொகுப்பாளர்

ஸ்பெயினில் தொலைக்காட்சி நேரையின் போது ஆண் தொகுப்பாளர் ஒருவர் பெண் தொகுப்பாளரின் ஆடையை கத்திரிக்கோல் வைத்து வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஸ்பெயினில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜூவான் யூ மெடியோ மற்றும் ஈவா ரூயிஸ் என்பவர்கள் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் நேரலையின்போது ஜூவான் சக தொகுப்பாளர் ஈவாவின் ஆடையை கத்திரிக்கோலால் வெட்டினார்.
 
ஈவா ரூயிஸ் சற்றும் கோபம் அடையாமல் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நேரலையின் போது இந்த சம்பவம் நடைபெற்றதால் பெரும் சர்ச்சைக்குள்ளானது. மேலும், இது நகைச்சுவைக்காக நடந்த நிகழ்வு என்றும், இதுகுறித்து முன்னரே தெரிவிக்கப்பட்டது என்றும் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

நன்றி: DD News