1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (11:14 IST)

பரமக்குடியின் அருமைக் கலைஞன்: கமலுக்கு கவிதை எழுதிய வைரமுத்து

உலகநாயகன் கமலஹாசன் கடந்த 1959ஆம் ஆண்டில் ’களத்தூர் கண்ணம்மா’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் எம்ஜிஆர் சிவாஜி போன்ற நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமலஹாசன் பின்னர் இளைஞராகி சின்ன சின்ன கேரக்டரில் நடித்து பின் கதாநாயகனானார்.
 
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கமல்ஹாசன் ஹீரோ அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார் என்பதும் அவரது படங்கள் வெளியாகும்போது மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கமலஹாசன் திரையுலகில் அறிமுகம் ஆகி 61 வருடங்கள் நிறைவு செய்ததை அடுத்து கோலிவுட் திரையுலகமே கொண்டாடி வருகிறது. அவருக்கு தொடர்ச்சியாக பல திரையுலக நட்சத்திரங்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்
 
இந்த நிலையில் கவியரசு வைரமுத்து தனது பாணியில் ஒரு கவிதையாகவே கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் கூறி இருப்பதாவது:
 
பரமக்குடியின்
அருமைக் கலைஞன்
பிறப்பு சிவப்பு;
இருப்பு கறுப்பு.
மரபுகடந்த புதுக்கவிதை
புரிதல் கடிது;
புரிந்தால் இனிது.
ஆண்டுகள் அறுபது
காய்த்த பின்னும்
நனிகனி குலுங்கும் தனிவிருட்சம்.
கலைத்தாய் தன் நெற்றியில்
மாற்றி மாற்றிச் சூடுவது
திலகத்தையும் இவர் பெயரையும்
‘கலையாக் கலையே கமல்’