திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By snoj
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:09 IST)

16 லட்சம் நிதி திரட்டி மேடை கலைஞர்களுக்கு வழங்கிய பாடகர் !

சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடி வரும் கொரொனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுக்காக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், வசூல் ராஜா என்ற படத்தில் கலக்கப் போவது யாரு என்ற பாடல் மூலம் திரையுலகில் அறிமுகமான  சத்யன், நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதரம் இழந்து வாடுகின்ற இசைக்கலைஞர்களுக்கு உதவ, முகநூல் வாயிலாக சில மாதங்களாக தினமும்பாடி வரும் சத்யம் மகாலிங்கம்  அதில் கிடைக்கும் நன்கொடையை மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்க அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

இந்தப் பணம் கலைஞர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது. சத்யன் இதுவரை 16  லட்சம் ரூபார்ய் நன்கொடை திருட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.