1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (18:46 IST)

உலகத்தமிழர்களுக்காக ஒரு வங்கி: முதல்வரிடம் வைரமுத்து கோரிக்கை!

உலகத் தமிழர்களுக்காக தமிழகத்தில் ஒரு வங்கி வேண்டுமென தமிழக முதல்வரிடம் கவிஞர் வைரமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
 
சென்னை கோட்டூர்புரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வு துறை சார்பில் தமிழர் நாள் கொண்டாடப்பட்டது
 
இதில் கவிஞர் வைரமுத்து பங்கு கொண்டு பேசியபோது ’இன்றைய இளைய தலைமுறையினர் இணைய வழியில் புத்தகங்களை அதிகம் வசிக்கின்றனர் என்றும் காகிதத்தில் வாசிக்கும் பழக்கத்தை மாணவர்கள் புதுப்பித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார் 
 
மேலும் உலகத் தமிழர்களுக்காக ஒரு தலைமை வங்கி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றும் முதலமைச்சர் கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது