வங்கி கணக்கில் ரூ.2000 செலுத்திய பிரதமர்! – புத்தாண்டில் விவசாயிகள் மகிழ்ச்சி!
புத்தாண்டு நாளான இன்று இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் பிரதமர் மோடி செலுத்தியுள்ளார்.
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் கடந்த 2018ம் ஆண்டு முதலாக தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் 11 கோடியே 60 லட்சம் விவசாயிகள் இந்த திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய அடுத்த தவணையை பிரதமர் மோடி புத்தாண்டு நாளான இன்று நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.