செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 5 ஜனவரி 2022 (12:45 IST)

RRR வரிசையில் பின்வங்கிய ராதே ஷ்யாம்!

இந்த மாதம் வெளியாக இருந்த நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் தள்ளி போயுள்ளது. 

 
பாகுபலி, சாஹோ உள்ளிட்ட பிரம்மாண்டமான படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் மற்றொரு பிரம்மாண்டமான படம் ராதே ஷ்யாம். 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முதல் டீசர் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியது.
 
இந்த படம் ஜனவரி மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் இப்போது ஒமிக்ரான் வைரஸ் தொற்று காரணமாக பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்படுவது மற்றும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இந்த படமும் ரிலிஸில் இருந்து பின் வாங்க உள்ளதாக சொல்லப்பட்டது. 
 
அதன்படி 50% பார்வையாளர்கள் அனுமதி போன்ற காரணங்களால் இந்த மாதம் வெளியாக இருந்த நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் தள்ளி போயுள்ளது. மேலும் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட ‘வலிமை’ திரைப்படத்தின் வெளியீடும் தற்போது உறுதிசெய்யப்படமால் இருக்கிறது.