1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (00:09 IST)

இலங்கை அரசின் மக்கள் வங்கி - கருப்பு பட்டியலில் இருந்து விடுவித்தது சீனா

உரம் இறக்கமதியில் எழுந்த பிரச்சினையால் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.Image caption: உரம் இறக்கமதியில் எழுந்த பிரச்சினையால் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.
 
இலங்கை அரசின் மக்கள் வங்கியை, கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
மக்கள் வங்கியை கடந்த அக்டோபர் மாதம் கறுப்பு பட்டியலில் இணைக்க கொழும்பிலுள்ள சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது. சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாகவே, மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்திருந்தது.சீனா நிறுவனத்திற்கும், இலங்கையில் உரத்தை இறக்குமதி செய்த தரப்பினருக்கும் இடையிலான வழக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த வழக்கில் இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து, சீன உர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டியிருந்த 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடந்த 7ம் தேதி மக்கள் வங்கி செலுத்தியது.
 
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு நாள் முன்பாக இந்த தொகை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவடைந்த பின்னணியில், மக்கள் வங்கி மீதான தடையை சீனா தளர்த்தியது.