செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (22:37 IST)

பாலாவின் ‘நாச்சியார்’ படத்தைப் பாராட்டிய வைரமுத்து

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படத்தை, வைரமுத்து பாராட்டியுள்ளார்.

 
பாலா இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘நாச்சியார்’. ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ், இவானா, ராக்லைன் வெங்கடேஷ் உள்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தைப் பார்த்த வைரமுத்து, “நாச்சியார் பார்த்தேன். கலையின் நிகழ் நீரோட்டத்தில் நிற்கிறீர்கள். பலே பாலா! ஜோதிகாவின் நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம். நீங்கள் தொடர்ந்து கலையில் இயங்க வேண்டும் சகோதரி. தம்பி ஜீ.வி, உன் ஜீவிதத்தில் ஒரு படம் இது… பாராட்டுகிறேன்! ஒளிப்பதிவு செய்த ஈஸ்வர், வெள்ளைக்காரக் கண்களோடு பிறந்த தமிழனப்பா நீ! படக்குழுவுக்கு என் வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.