வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (21:49 IST)

ஜோதிகா பேசும் அடுத்த வசனம் - சர்ச்சையை கிளப்பும் நாச்சியார்

நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா பேசியுள்ள மற்றொரு வசனமும் சர்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
இப்படத்தின் டீஸர் வெளியாகிய போது அதில் ஜோதிகா பேசியிருந்த ஒரு கெட்ட வார்த்தை மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
அதுபற்றி விளக்கம் அளித்த ஜோதிகா “நாச்சியார் டீசரில் நான் பேசியது கெட்ட வார்த்தைதான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த வார்த்தை நிறைய படங்களில் நிறைய ஆண்கள் பேசியிருக்கிறார்கள். ஒரு பெண் முதன்முறையாக பேசுவதால் அது விவாத பொருளாக மாறியது. படத்தில் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசனம் அது. இன்னும் கொஞ்சம் டயலாக் சேர்த்து பேசணும். ஆனால் நான் கொஞ்சம் குறைத்து பேசியிருக்கிறேன். படத்தில் குறிப்பிட சூழலில் இந்த வசனம் வரும்போது, ரசிகர்கள் கண்டிப்பாக அதை ஏற்று கொள்வார்கள் என நம்புகிறேன்” எனக் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று வெளியானது. அதில், ஒரு காட்சியில் ‘எங்களுக்கும் கோவிலும், குப்பை மேடும் ஒன்னுதான்’ எனக் கூறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதேபோல், அனைத்து மதங்களின் பாடல்களும் ஒலிக்கின்றன. 
 
எனவே, இந்த காட்சிக்கு மதவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.