செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:32 IST)

வட சென்னை என கனவு படம்: தனுஷ் உருக்கமான பதிவு

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படம்  இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

 
இதில் ஐஸ்வர்யா ராஜேஸ், ஆண்ட்ரியா, அமீர் உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
 
இந்த படத்தில் சினிமாத்தனத்தை கலந்து, அரசியலையும் கலந்து  வட சென்னை மக்களின் எதார்த்த வாழ்க்கையை வலிமையாக பதிவு செய்திருப்பது படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும். இதில் அன்பு கேரக்டரில்  தனுஷ் நடித்துள்ளார். ரவுடி, வெட்டுக்குத்து என வன்முறை களமாக படம் இருக்கும் என தெரிகிறது.   இந்நிலையில் வடசென்னை பாகம் ஒன்று தன்னுடைய கனவு படம் என்றும், இதற்காக 3 வருடம் காத்திருந்ததாகவும்  இன்று உலகம் முழுவதும் படம் வெளியாகி உள்ளதாகவும் தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.