செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 17 அக்டோபர் 2018 (19:31 IST)

'வடசென்னை' படம் எப்படி? அதிகாலை காட்சி பார்த்தவர்களின் கருத்து

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை 5 மணி முதல் காட்சிகள் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

முதலாவதாக பயங்கர வன்முறை காட்சிகளும் கெட்ட வார்த்தைகளும் அதிகம் இருப்பதால் இந்த படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டாம் என்று படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் 'காட் பாதர்', 'நாயகன்' படங்களுக்கு பின்னர் ஒரு கச்சிதமான கேங்க்ஸ்டார் படம் என்றும் ஆக்சன் படத்தை விரும்புபவர்கள் இந்த படத்தை மிஸ் செய்துவிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தனுஷ் வழக்கம்போல் தனது நடிப்பில் மிரட்டியுள்ளதாகவும் மீண்டும் ஒருமுறை தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி ஒரு மிரட்டலான படைப்பை கொடுத்துள்ளதாகவும் டுவிட்டர் பயனாளிகள் கூறியுள்ளனர்

அமீர் கேரக்டரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறும் ஒருசிலர் அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையின் முக்கியமான படம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிக அருமை என்றும் விமர்சனங்கள் வெளிவந்துள்ளது. மொத்தத்தில் ஒருமுறை பார்க்கும் வகையிலான ஒரு கேங்ஸ்டர் படம் என்பதே ஆடியன்ஸ் கருத்தாக உள்ளது. இந்த படத்தின் நமது விமர்சனத்தை விரைவில் பார்ப்போம்