1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (19:19 IST)

"வடசென்னை" பட்டய கிளப்பும் முன்பதிவு

நடிகர் தனுஷ் நடிப்பில், விரைவில் திரைக்கு வரவிருக்கும் வடசென்னை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கலர்ஃபுப் ஸ்டில்ஸ் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு முக்கிய காரணம் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியுள்ளார் என்பதால் தான்.
இந்த கூட்டணி இணைந்தாலே படம் சரவெடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கலாம், இந்நிலையில் வடசென்னை படத்தின் முன்பதிவு சென்னையில் வேற லெவலில் ஆரம்பமாகியுள்ளது .
 
நடிகர் தனுஷ், இயக்குநர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.
 
ரோகினி, வெற்றி திரையரங்குகளில் எல்லாம் ஒதுக்கப்பட்ட காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளதால்  ஸ்பெஷல் காட்சிகள் திரையிடப்படவுள்ளார்களாம்.
 
இந்த நிலையில் இப்படம் தான் தனுஷின் திரைப்பயணத்தில் ஒரு  பெரிய ஓப்பனிங்காக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எப்படியும் இப்படம் முதல் நாள் ரூ 7 கோடியிலிருந்து 9 கோடி வரை வசூலித்து சாதனை படைக்கலாம்  என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.