திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (11:47 IST)

கைவிடப்பட்டது வடசென்னை 2 – இதுதான் காரணமா ?

சென்ற ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை எடுத்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை  படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும்  அசுரன்  படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படம் வெக்கை என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்தப்படத்துக்குப் பிறகு வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம் முதல்பாகத்தில் வட சென்னைப் பகுதியில் வாழும் மக்களை தவறாக சித்தரித்துள்ளதாக அவர்கள் நினக்கிறார்களாம். அதனால் அந்த இடத்தில் மறுபடி படப்பிடிப்பு நடத்த அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்பதாலும் படத்தில் நடித்த நடிகர் நடிகைகளை இனி ஒருங்கிணைப்பது கஷ்டமானக் காரியம் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக வடசென்னையின்  முந்தைய பாகமாக ராஜன் வகையறா வெப் சீரிஸாக எடுக்க உள்ளதாக வெற்றிமாறன் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.