வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஜூலை 2019 (09:11 IST)

ரஜினி மறுத்த கடைசி விவசாயி – அரசியல்தான் காரணமா ?

காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயி எனும் படம் உருவாகிவருகிறது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை ஆகியப் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மணிகண்டன் தனது நான்காவதாகப் படமாகக் கடைசி விவசாயி எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார். இந்தப்படத்தில் 70 வயது விவசாயி ஒருவர் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இயக்குனர் மணிகண்டன் இந்தப்படத்தின் கதாநாயகனாக முதலில் ரஜினியையைத்தான் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது எனவும் ஆனால் அவர் மறுத்துவிட்டுவிட்டார். என் கதையை மறுத்த ஒரு வாரத்திலேயே அவர் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார் எனக் கூறியுள்ளார்.

இதுபோல ஏற்கனவே வெற்றிமாறன் சொன்ன அரசியல் கதையையும் ரஜினி முன்பு மறுத்ததாக அவரே சொல்லியிருக்கிறார். அரசியல் ஆசை இருக்கும் ரஜினி தொடர்ந்து அரசியல் கதைகளை மறுப்பது ஏன் என ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.