அசுரனில் நாட்டுப்புற பாட்டு – ஜி வி பிரகாஷ் வெளியிட்ட அப்டேட் !

Last Modified வெள்ளி, 12 ஜூலை 2019 (13:14 IST)
தனுஷ் இப்போது வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தின் பாடல்கள் பற்றி ஜி வி பிரகாஷ் அப்டேட் வெளியிட்டுள்ளார்.

வடசென்னை  படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும்  அசுரன்  படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படம் வெக்கை என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்துக்கு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் அசுரன் படத்துக்கான பாடல் பதிவு புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஜி வி பிரகாஷ் இந்த வாரம் அடுத்ததாக ஒரு நாட்டுப்புற பாடல் பதிவு விரைவில் நடக்க இருப்பதாகவும் அதை யார் பாடப்போகிறார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இயக்குநரும் பாடலாசிரியருமான ஏகாதசி இதற்கான வரிகளை எழுதியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :