வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (22:42 IST)

''வாத்தி'' படம் மிகப்பெரிய வெற்றி பெரும் - தயாரிப்பாளர் நாகவம்சி

vathi
'வாத்தி' படம் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்து சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தற்போது, வாத்தி பட இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்தது.

இந்த விழாவில் தனுஷின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில், வா வாத்தி, நாடோடி மன்னன், கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் வெளியிடப்பட்டன.

இந்த விழாவில் பேசிய  வாத்தி பட தயாரிப்பாளர்   நாகவம்சி,  தனுஷின் அனைத்து ரசிகர்களைப் போன்று நானும் தனுஷின் பெரிய ரசிகன், நான் உறுதியாகச் சொல்லுகிறேன் வாத்தி படம் திருச்சிற்றம்பலம் படத்தைக் காட்டிலும் அதிக வெற்றி பெறும்.  தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டிலும் ஹவுஸ்புல்லலாக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகிய ‘வாத்தி’  படத்தில் தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.