1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (14:27 IST)

கமலுக்கு அடுத்து தனுஷ் தான் ....பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் திருச்சிற்றம்பலம்!

thiruchitrambalam success party
கமலின் விக்ரம் படத்திற்குப் பிறகு அதிக வசூலீட்டிய படமாக திருச்சிறம்பலம் பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்துள்ளது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி திரைப்படம் திருச்சிற்றம்பலம் இந்த படம் உலகம் முழுவதும் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் நேற்று முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், திரைப்படம் வெளியான 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலீட்டுயுள்ளதால் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். இந்தப் புகைப்படங்கள் வைரலானது.

,தமிழகத்தில், விஜய்யின் பீஸ்ட் படத்தின் 8 நாள் வசூலை திருச்சிற்றம்பலம் படத்தின் வசூல் முறியடித்துள்ளதாகக் கூறப்பட்ட  நிலையில், இந்த ஆண்டு வெளியாகி ஹிட் படங்களில் கமலின் விக்ரம் படத்திற்குப் பிறகு அதிக வசூலீட்டிய படமாக திருச்சிறம்பலம் பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்துள்ளது.

எனவே, விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை ஆகிய இரண்டு பெரிய படங்களின் சாதனையை தனுஷ் முறியடித்துள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்படத்தின் அதிகார்ப்பூர்வ பாக்ஸ் ஆபீஸ் ரிபோர்ட் இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.