1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Ravi mohan and dulqer salman great escape from thuglife

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

தக் லைஃப் திரை விமர்சனம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானார். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன். ஆனாலும் முதல் நாளில் இந்த படம் 19 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. எதிர்மறை விமர்சனங்களால் இரண்டாம் நாளில் வசூல் 8 கோடி ரூபாய் அளவுக்கு பாதியாகக் குறைந்தது.

இந்த படத்தில் தற்போது சிம்பு நடித்திருக்கும் கதாபாத்திரத்தில் முதலில் துல்கர் சல்மான்தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் படப்பிடிப்புத் தாமதமானதால் அவர் இந்த படத்தில் இருந்து விலகி ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் நடித்தார். அந்த படம் ரிலீஸாகி பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனால் தற்போது ‘தக்லைஃப்’ திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அது போலவெ ஜெயம் ரவியும் இந்த படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் வெளியேறினார். இதையடுத்து தற்போது அவர்கள் இருவரும் நல்ல முடிவை எடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?