1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 12 செப்டம்பர் 2022 (17:23 IST)

உலகளவில் திருச்சிற்றம்பலம் படம் ரூ.175 கோடி வசூல்...

thiruchitrambalam success party
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான திருச்சிற்றம்பலம் ரூ. 175 கோடி வசூலீட்டியுள்ளது.

தனுஷ் நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி திரைப்படம் திருச்சிற்றம்பலம் இந்த படம் உலகம் முழுவதும் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


இந்த நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் முதல் நாளில் 9 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது.


இந்த நிலையில், தனுசின் அசுரன் படத்திற்குப் பின் திருச்ச்சிற்றம்பலம் படம் ரூ.100  கோடி ரூபாய் வசூலீட்டி, 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்த நிலையில் இப்போது இப்படம் உலகம் முழுவதும் ரூ.175 கோடி வசூலீட்டியுள்ளதாக பிரபல சினிமா ஊடகவியலாளர் உமர் சந்து தன் டுவிட்டர் பக்கத்தில் த்கவல் தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் வெளியான படங்களில்,  கமலின் விக்ரம் படத்திற்குப் பிறகு அதிக வசூலீட்டிய படமாக திருச்சிறம்பலம் பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்துள்ளது.



ரூ.100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்த ''திருச்சிற்றம்பலம்''