வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வியாழன், 6 பிப்ரவரி 2020 (13:22 IST)

திருட்டு தம் அடிப்பதிலும் ஒரு சுகம் " வானம் கொட்டட்டும்" படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் !

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மணிரத்னத்தின் சிஷ்யன் தனா இயக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், சாந்தனு, அமித்ஷா பிரதான், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
 
மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா நடிக்க அவர்களது மகனாக விக்ரம் பிரபு நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து வருகிற 2020 ஜனவரியில் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தில் இடம்பெறவுள்ள "கண்ணு தங்கம்" என்ற பாடல் வெளியானது.
 
இந்நிலையில் தற்போது திருட்டு தனமாக சிகரெட் பிடிக்கும் அமிதாஷை ஐஸ்வர்யா ராஜேஷ் கிண்டலடிக்கும் அழகான ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது. இந்த படம் நிச்சயம் அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.