செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 23 ஜனவரி 2020 (20:08 IST)

"வானம் கொட்டட்டும்" .. அசத்தலான டிரைலர்..

விக்ரம் பிரபு, சாந்தனு ஆகியோரின் நடிப்பில் உருவான ”வானம் கொட்டட்டும்” திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 
விக்ரம் பிரபு,  ஐஸ்வர்யா ராஜேஷ்,  மடோனா செபஸ்டியன், சரத்குமார்,  ராதிகா சரத்குமார்,  சாந்தனு,  அமித்ஷா  பிரதான், நந்தா, பாலாஜி சக்திவேல் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “வானம் கொட்டட்டும்”. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ”தனா” இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணி ரத்னம் உதவியாளராக இருந்தவர். இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணி ரத்னமே தயாரித்துள்ளார். பிரபல பாடகரான சித் ஸ்ரீராம் இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

வயதான கெட்டப்பில் அப்பா , அம்மாவாக சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்  நடிக்க  அவர்களது  மகனாக  விக்ரம் பிரபு  நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை சார் முத்து வெங்கட சுப்பா ராவ் ஹாலில் பிரமாண்டமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.