செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (19:55 IST)

பிரபல இயக்குநருடன் இணையும் சந்தானம் !

தமிழ் சினிமாவில்  உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ராஜேஷ்.எம். இவர் இயக்கிய சிவா மனசில சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்கள் பெரும் பெற்றி பெற்றன. அந்தப் படங்களின் வெற்றிக்கு பிரபல நடிகர் சந்தானத்தின்  காமெடியும் முக்கிய காரணம் ஆகும்.
அவரது இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில்  ராஜேஷ்.எம் நடிகர் சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்ய எண்ணியுள்ளார்.

தற்போது இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.