ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (21:31 IST)

பிரபல நடிகரை ஆந்திர முதல்வர் என்று பதிவிட்ட ஊர்வசி ரவுத்தேலா

பிரபல இந்தி நடிகை ஊர்வசி ரவுத்தேலா தன் சமூக வலைதளத்தில் ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் என்று பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு சிங் ஆப் தி கிரெட் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக ஊர்வசி ரவுத்தேலா. அதன்பின்னர், பாஜ் ஜானி, காபில், பகல்பந்தி, வால்டேட் வீரய்யா, முகவர், லெஜண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த  நிலையில் ஆந்திர மாநிலத்தில் தற்போது  முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில்,    ஊர்வசி ரத்தேலா தன் டுவிட்டர் பக்கத்தில் பிரபல  நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணை ’’ஆந்திர முதல்வர்’ என்று பதிவிட்டுள்ளது அம்மாநில சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவுத்தேலா சமீபத்தில் மும்பை மையப்பகுதியில்  ரூ.190 கோடியில் பிரமாண்ட பங்களா   வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.