ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 5 ஜூலை 2023 (14:16 IST)

விஜய் போல் இன்ஸ்டாவில் இணைந்த பவன் கால்யாண்! குறைந்த நேரத்தில் பல மில்லியன் பாலோயர்ஸ்

தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவர் அரசியலில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் சினிமாவில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது  நடிப்பில் புரோ, உசாத் பகத் சிங், கம்சா சாப்டர் 2, ஹரி ஹர வீரா மாலு ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இவை விரைவில் ரிலீஸாகவுள்ளன.

இந்த நிலையில்,   நடிகர் விஜய் போல்  நடிகர் பவன் கல்யாண் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய சில மணி நேரங்களில் மில்லியன் கணக்கில் பாலோயர்கள் பின்தொடர்ந்தனர்.

இதுவரை ஒரு போஸ்ட் கூட அவர் பதிவிடாத நிலையில், அவரை 5.3 மில்லியன் பேர் தொடர்ந்து வருகின்றனர்.

அதன்படி, 1 மில்லியன் பாலோயர்களை குறைந்த நேரத்தில் பெற்ற தெலுங்கு நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி,

பவன் கல்யாண் (380  நிமிடங்கள்)
பிரபாஸ் ( 23 நாட்கள்)
ராம்சரண் ( 72 நாட்கள்)
மகேஷ் பாபு ( 89 நாட்கள்)
அல்லு அர்ஜூன்( 184 நாட்கள்)
என்.டி.ஆர். 41 நாட்கள்) ஆகும்.