வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஜூலை 2023 (13:05 IST)

பவன் கல்யான், சன்னி லியோனை விமர்சித்த நடிகை ரோஜா!

ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா, நடிகர் பவன் கல்யாண் மற்றும் சன்னி லியோன் பற்றி விமர்சித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் ஆபாச நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில், தற்போது, ஹீரோயினாக  நடித்து வருவதுடன், முன்னணி நடிகர்களின் படங்களில் ஐட்டம்  டான்ஸ் ஆடி வருவதுடன் சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த  நிலையில், சன்னி லியோனை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அதேபோல், ஆந்திராவில் பவன் கல்யாண் தன் வாராஹி யாத்திரையின்போது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்த்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சரும் நடிகையுமான ரோஜா '' பவன் மீதுள்ள கோபத்தில், சன்னி லியோனை இழுத்தார். பவன் கல்யாண் வந்து ஜெகனுக்கு கற்றுத் தருகிறார். இது சன்னி லியோனுக்கு வேதம் ஓதியபோல்'' என்று தெரிவித்தார்.

ரோஜாவின் கருத்திற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம் வலுத்து வருகிறது.