செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (11:50 IST)

பிரபல நட்சத்திரத்தின் எதிர்பாராத சந்திப்பு - இன்ப அதிர்ச்சியில் சிம்பு!

படப்பிடிப்பு தளத்தில் சிம்புவை சந்தித்த பிரபல நட்சத்திரத்தால் இன்ப அதிர்ச்சி அடைந்தார் நடிகர் சிம்பு.
நடிகரும் இயக்குனருமான சுந்தர் .சி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கலகலப்பு 2’. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக சுந்தர் .சி ‘சங்கமித்ரா’ படத்தை இயக்குவார் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 
 
‘அத்தாரிண்டிகி தாரேதி’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தப் படம் அஜீத், விஜய்க்காக வாங்கப்பட்டது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்துவருகிறார் தமிழர்களின் உள்ளம் கவர்ந்த நடிகர் சிம்பு.     
 
இப்படத்தில் நடிகர் சிம்புவுடன் மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, வம்சி கிருஷ்ணா, மஹத் மற்றும் ரோபோ ஷங்கர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹிப்-ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.   
இப்படத்தின் டீஸர் வெளியாகி அனைவரது பார்வையையும் ஈர்த்தது. தற்போது வெளியாகிய செய்தி என்னவென்றால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார் தெலுங்கு சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான நடிகர் மகேஷ் பாபு.   
 
தமிழ் திரையுலகம் தவிர்த்து பிற மாநிலங்களிலும் பரிச்சயமானவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.